புதுச்சேரி

புதுச்சேரி பட்ஜெட் 2024-25: ஏழை எளிய மக்களுக்கான மக்கள் நலத்திட்டங்களுக்கு ரூ.2202 கோடி ஒதுக்கீடு

புதுச்சேரி, ஆக. 26: புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 18-வது பட்ஜெட், மக்கள் நலனையும், உட்கட்டமைப்பு மேம்பாட்டையும் மையமாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் க. லட்சுமிநாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார். மக்கள் முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான இந்த அரசு, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை வகுத்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்காக மட்டும் ரூ.2202.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையான முக்கியத்துவத்துடன் ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி, மத்திய நீர்வளத்துறை மற்றும் உலக வங்கி மூலம் ரூ.7550 கோடிக்கும் அதிகமான நிதி உதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மாநில வரலாற்றில் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

தொழில் தொடங்குவதை எளிமையாக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதன் மூலம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சேதராப்பட்டு தொழிற்பேட்டை, மென்பொருள் பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வரியில்லா பட்ஜெட்டாக அமைந்துள்ள இது, ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, காமராஜரின் ஆட்சி முறையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன