புதுச்சேரி

காமராஜ் நகர் தொகுதி வளர்ச்சி: அமைச்சர் நமச்சிவாயத்துடன் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆலோசனை

புதுச்சேரி, ஆக. 19: புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை, காமராஜ் நகர் தொகுதியின் வளர்ச்சிக்காக ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, தொகுதியின் பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தற்போது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஜோஸ் சார்லஸ் மார்டின் எடுத்துரைத்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகப் பொதுச்செயலாளர் ராம்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

காமராஜ் நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் வகையில், போக்குவரத்து சீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான வரைபடங்களை வைத்து விரிவான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த ஆலோசனைகள் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன