தமிழ்நாடு

தமிழக நீர்நிலைகளைச் சீரமைக்க ரோட்டரி அமைப்புடன் இணைந்து செயல்பட ஆலோசனை: அமைச்சர் ஆனந்த்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் வாய்க்கால்களைத் தூர்வாரி, சீரமைத்து பாதுகாப்பது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவர் எம்.முருகானந்தத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின்படி இந்த முக்கிய கலந்தாய்வு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், தமிழகத்தின் நீர்த்தேக்கத் திறனை அதிகரிப்பது, நீர்வரத்து மற்றும் வெளியேற்றப் பாதைகளைச் சீரமைப்பது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் கரைகளைப் பலப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், நீர்நிலை பாதுகாப்புப் பணிகளில் ரோட்டரி போன்ற தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நீர்நிலைகளைத் தலைமுறைகள் பயன்பெறும் வகையில் மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன