புதுச்சேரி

தமிழ் தாய் நகர் ஸ்ரீ புறையாத்தம்மன் ஆலய 100-ஆம் ஆண்டு தேர் திருவிழா

புதுச்சேரி தமிழ் தாய் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புறையாத்தம்மன் தேவஸ்தானம் மற்றும் தமிழ் தாய் நாயகி உடனுறை ஸ்ரீ சாமபூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் 100-ஆம் ஆண்டு பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் திருவீதி உலாக்கள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான நூறாம் ஆண்டு தேரோட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

In brief (English)

Devotees took part in the grand 100th annual chariot festival at Sri Puraiyathamman Temple in Tamil Thai Nagar, Puducherry.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன