அரசியல்

ராஜஸ்தானில் ₹5,755 கோடி மதிப்பிலான 944 வளர்ச்சித் திட்டங்கள்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்!

சித்தூர்கர்:

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரில் நடைபெற்ற அரசு விழாவில், 15 மாவட்டங்களுக்கான ₹5,755 கோடி மதிப்பிலான 944 வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, இப்பகுதியில் ₹1.5 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள அவரது 21 அடி உயர திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாநிலத்தின் உட்கட்டமைப்பு, குடிநீர் வசதி, சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இத்திட்டங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன