தேசியம்

பாதுகாப்புப் படையினருக்கு 78 வீரதீர விருதுகள்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பிற்காக வீரத்துடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினருக்கு 78 வீரதீர விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்து வீர மரணமடைந்த 13 வீரர்களுக்கு அவர்களின் உயரிய தியாகத்தைப் போற்றும் வகையில் மரணத்திற்குப் பின் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து இந்தியா தொடர்ந்து முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

In brief (English)

President Droupadi Murmu has approved 78 gallantry awards for armed forces and security personnel, including 13 posthumous honours.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன