புதுச்சேரி
உருளையன்பேட்டையில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ நேரு ஆய்வு செய்தார்
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட செங்குந்தர் வீதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நகராட்சி மூலம் புதிய சிமெண்ட் சாலை மற்றும் இருபுற வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிப்பதுடன், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் தரமானதாக அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது புதுச்சேரி நகராட்சி உதவிப் பொறியாளர் நமச்சிவாயம், இளநிலைப் பொறியாளர் சாம்பசிவம் மற்றும் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
In brief (English)
Orleanpet MLA G. Nehru inspected ongoing cement road and drainage canal construction works at Sengunthar Street and urged officials to finish on time.
