தேசியம்

பெண்களுக்கான புதிய கல்வித் திட்டம்: தேசிய மகளிர் ஆணையம் – இக்னோ இடையே ஒப்பந்தம்

புது தில்லி, ஆகஸ்ட் 14: அறிவு, திறன் மேம்பாடு மற்றும் பாலின உணர்திறனை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மகளிர் ஆணையம் (NCW) மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU) இடையே இன்று (ஆகஸ்ட் 14) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மூன்று மைக்ரோ கிரெடென்ஷியல் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன: பணியிடத்தில் பாலியல் தொந்தரவைத் தடுத்தல் (POSH), பெண்களின் தலைமைத்துவம், திறன் மேம்பாடு மற்றும் பணியிட நடத்தை, பாலின உணர்திறன்: சமூகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவை.

தேசிய மகளிர் ஆணையம் சார்பில் தலைவர் திருமதி. விஜயா ரஹத்கரும், இக்னோ சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் உமா காஞ்சிலாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் பேசுகையில், இந்த ஒப்பந்தம் மூலம், பெண்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்த கட்டமைக்கப்பட்ட கல்வியை அணுகக்கூடியதாக மாற்ற முடியும். தேசிய மகளிர் ஆணையத்தின் அனுபவம் மற்றும் இக்னோவின் கல்வி வலிமை ஆகியவை இணைந்து, பெண்களின் மேம்பாட்டிற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

இக்னோ துணைவேந்தர் பேராசிரியர் உமா காஞ்சிலால் பேசுகையில், இக்னோவின் தேசிய அளவிலான விரிவாக்கம் மற்றும் கல்வி வலிமை ஆகியவற்றைப் பயன்படுத்தி, பெண்களுக்கான இந்த முக்கியமான பாடத்திட்டங்களை நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்க முடியும். இது பெண்களின் திறன் மேம்பாட்டிற்கும், தலைமைத்துவத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன