தமிழ்நாடு
ஆகஸ்ட் 22-ல் திமுக செயற்குழு கூட்டம்: 10 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்பு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ஆம் தேதி கட்சியின் உயர்நிலைக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கட்சியில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கையின்படி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. சுமார் 10 மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி, ஒருவருக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க ஆலோசிக்கப்படுகிறது.
In brief (English)
The DMK is holding its executive committee meeting on August 22, where structural changes and the replacement of around 10 district secretaries are likely.