புதுச்சேரி

பிரிவினை கொடுமைகள் நினைவு தினக் கண்காட்சி

புதுச்சேரி நகராட்சி கட்டிடத்தில், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த துயரங்களை நினைவுகூரும் வகையில் அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் சிறப்புக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் க. கைலாஷ்நாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பிரிவினைக் கால வரலாற்றுப் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் அ. அன்பழகன், உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் உடனிருந்தனர். ஏராளமான மாணவ, மாணவியரும் கண்காட்சியில் பங்கேற்று பிரிவினைக் காலத்தின் வரலாற்று நிகழ்வுகளை அறிந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன