புதுச்சேரி

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயிலில் தேர்த்திருவிழா: துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்

புதுச்சேரி, ஆகஸ்ட் 14: அரியாங்குப்பம் தொகுதி, வீராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கழுநீரம்மன் தேவஸ்தானத்தின் ஆண்டுத் தேர்த்திருவிழா இன்று (ஆகஸ்ட் 14) கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள், மாண்புமிகு தற்காலிக சபாநாயகர் திரு. அ. அன்பழகன் அவர்கள், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள், மாண்புமிகு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் திரு. வி.பி. சிவக்கொழுந்து அவர்கள் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திரு. ராஜவேலு ஆகியோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் பொதுமக்களுடன் இணைந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன