தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்: 51-வது மாநில சிவில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் நெய்வேலி பெண் காவலர் 3 பதக்கங்கள் வென்றார்!

கடலூர், ஆகஸ்ட் 13: கடலூர் மாவட்டம், நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் தலைமை காவலர் திருமதி. ராஜேஸ்வரி, சமீபத்தில் நடைபெற்ற 51-வது மாநில அளவிலான சிவில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சாதனையை அடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ராஜேஸ்வரியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். அவர் பேசுகையில், திருமதி. ராஜேஸ்வரியின் இந்தச் சாதனை கடலூர் மாவட்ட காவல்துறைக்குப் பெருமை சேர்க்கிறது. அவரது கடின உழைப்பு மற்றும் திறமை மற்ற காவலர்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்று பாராட்டினார்.