புதுச்சேரி

புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பேருந்து நிலையம் முன்பு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன