அமித் ஷா வருகை: புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகையை முன்னிட்டு, பாஜக மாநில அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்க உள்ள நிலையில், வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் ஆர். செல்வம் மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சரின் பயணத் திட்டம், கட்சியினர் பங்கேற்பு, பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
புதுச்சேரி வருகையின்போது காவல்துறைக்கான ஜனாதிபதியின் ‘வண்ண விருதை’ அமித் ஷா வழங்குகிறார். இதையொட்டி நகரில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.