புதுச்சேரி
வில்லியனூர் பள்ளியில் மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கல்
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மழை அங்கி (ரெயின் கோட்) வழங்கும் விழா நடைபெற்றது. வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் மற்றும் முன்னாள் சேர்மன் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரெயின் கோட்டுகளை வழங்கினர். தொடர்ந்து மாணவர்கள் தற்காப்புக் கலைகளான சிலம்பம் உள்ளிட்ட திறமைகளை செய்து காட்டி பாராட்டுகளைப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
In brief (English)
Raincoats were distributed to 9th grade students at St. Lourde Annai Aided Boys High School in Villianur by MLA Ravikumar. Students also presented a martial arts demonstration during the event.
