புதுச்சேரி

காமராஜ் நகர் தொகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் பூமி பூஜை செய்து தொடக்கம்!

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர் 8-வது குறுக்குத் தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் முறைப்படி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ரெயின்போ நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாகப் பொதுச்செயலாளர் ராம்குமார், தொகுதித் தலைவர் கோகுல கண்ணன், ரெயின்போ நகர் வார்டுத் தலைவர் என்.ஆர். சுரேஷ், பூத் தலைவர் சுதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இப்பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பூமி பூஜை நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன