தமிழ்நாடு
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வேண்டும்: வைரமுத்து வலியுறுத்தல்
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர்களின் மொழி அடையாளத்தையும் பண்பாட்டுப் பெருமையையும் பிரதிபலிக்கும் பாடல் என்பதால் அதற்கு உரிய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு விழாக்கள், பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் மற்றும் பட்டமளிப்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து எந்த இடத்தில் பாடப்பட வேண்டும் என்பது சமீப காலமாக விவாதப் பொருளாகியுள்ளது. மாநில நிகழ்வுகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே வழக்கமான நடைமுறை என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.