Uncategorized

டெல்டா விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆர். நிர்மல் குமார், வெங்கட்ராமணன், ராஜ்மோகன், வி. காந்திராஜ் மற்றும் ஆர். வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் உடனடி கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வேளாண் பட்ஜெட்டைத் தொடர்ந்து டெல்டா விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன