தமிழ்நாடு
குத்தாலம் திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப உற்சவம்


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருத்துருத்தி தருமையாதீனத்துக்குட்பட்ட ஸ்ரீ அரும்பன்னவனமுலையாள் சமேத ஸ்ரீ சொன்னவாறறிவார் திருக்கோவிலில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ஸ்ரீ வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பத்தில் உலா வந்தார். குளக்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து, ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபட்டனர்.
தெப்ப உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஆடிக்கிருத்திகை முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகக் கொண்டாடப்படுவதால், பக்தர்கள் விரதமிருந்து ஆலயங்களில் வழிபடுவது வழக்கம்