புதுச்சேரி

மேட்டுப்பாளையத்தில் ஹைமாஸ் மின்விளக்குக் கோபுரம் திடீரென சாய்ந்தது

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஹைமாஸ் மின்விளக்குக் கோபுரம் திடீரென விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோபுரம் கீழே விழுந்த நேரத்தில் அந்த வழியாகப் பொதுமக்கள் யாரும் செல்லாததால், பெரும் உயிரிழப்புச் சம்பவம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினரும் பொதுப்பணித் துறை ஊழியர்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, விழுந்த கோபுரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கனமழை மற்றும் காற்றின் தாக்கத்தால் கோபுரம் சாய்ந்ததா, அல்லது அதன் அமைப்பில் தொழில்நுட்பக் குறைபாடு இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் லாரி முனையப் பகுதியில் கனமழையால் சுவர் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக அப்பகுதியில் உள்ள கட்டமைப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன