புதுச்சேரி
காமராஜர் நகரில் இலவச கண் கண்ணாடி மற்றும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்
புதுவை தமிழ்ச் சங்கத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதியில் சாக்கடை துர்நாற்றத்தைக் குறைக்க நுண்ணுயிரிகள் தெளிக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆர்.ஓ பிளான்ட் மற்றும் ஏ.ஐ கேமராக்கள் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காமராஜர் நகர் தொகுதியை மாதிரி தொகுதியாக மாற்றுவதே தனது இலக்கு என்றும் அவர் கூறினார்.
In brief (English)
MLA Jose Charles Martin distributed free eyeglasses to residents and announced multiple development initiatives including AI surveillance and desilting in Kamarajar Nagar.
