புதுச்சேரி
புதுச்சேரி அரசின் சார்பில் முன்னாள் முதல்வர் எதுவார் குபேர் பிறந்தநாள் விழா
புதுச்சேரியின் முதலாவது முதலமைச்சரும் நகரத்தந்தை எனப் போற்றப்படுபவருமான எதுவார் குபேரின் பிறந்தநாள் புதுச்சேரி அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள எதுவார் குபேரின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜுவேலு, சிவக்கொழுந்து மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே. சாய் ஜே. சரவணகுமார், ஐயப்பன், நாராயணசாமி, விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
In brief (English)
The Puducherry government officially celebrated the birth anniversary of former Chief Minister Edouard Goubert, with ministers and MLAs garlanding his statue at Bharathi Park.
