தேசியம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 7-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைக்கேடுகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட தலைவர்கள், பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் கசிவு கும்பல் செயல்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தினர். அமளி தொடர்ந்ததால் 7-வது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன.

In brief (English)

Parliament proceedings were disrupted for the seventh consecutive day as opposition parties protested over the NEET paper leak issue. Opposition leaders alleged that BJP members were involved in paper leak networks.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *