புதுச்சேரி

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் கஞ்சா விற்க முயன்ற 4 பேர் கைது: கத்திகள், கஞ்சா பறிமுதல்

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மூலகுளம் வில்லியனூர் மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் மணிகண்டன், தேவா, சரண் மற்றும் திவாகர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் 3 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Puducherry police arrested four youths in the Reddiarpalayam police station limits for attempting to sell ganja to school and college students. Acting on a tip-off during midnight patrolling on the Moolakulam-Villianur Main Road, a team led by Sub-Inspector Kalaiyarasan rounded up the suspects. The arrested individuals were identified as Manikandan, Deva, Saran, and Dhivakar. Police seized 250 grams of ganja and three knives from their possession. Cases were registered under four sections, including the NDPS Act and Arms Act, and all four were remanded to Kalapet jail.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *