Uncategorized

மூன்று நாள் தொடர் விடுமுறை: புதுச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல்

மூன்று நாள் தொடர் விடுமுறை: புதுச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரி: மூன்று நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளதால், நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை கிடைத்துள்ள நிலையில், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இதனால் நேற்று முதலே நகரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது.

குறிப்பாக கடற்கரை சாலை, ராக் பீச், ஒயிட் டவுன், பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை நோக்கிச் செல்லும் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. நகரின் முக்கிய சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நகரின் பல பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக நகரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் விடுமுறை காரணமாக மேலும் பலர் புதுச்சேரிக்கு வரக்கூடும் என்பதால், முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன