தேசியம்

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: சுய-தகவல் பதிவை முடித்த ஆளுநர் ஆர்.என். ரவி

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான சுய-தகவல் பதிவு முறையில், மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி தமது குடும்ப விவரங்களை se.census.gov.in இணையதளத்தில் பதிவு செய்து செயல்முறையை முடித்தார்.

மேற்கு வங்கத்தில் சுய-தகவல் பதிவுப் பணிகளை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதன்மூலம், தமது குடும்ப விவரங்களை மக்கள் தாங்களே இணையவழியில் பதிவு செய்யும் புதிய முறைக்கு மாநிலம் காலடி எடுத்து வைத்துள்ளது.

பதிவு செய்த பின்னர், மாநில மக்கள் அனைவரும் se.census.gov.in இணையதளத்தில் தங்கள் குடும்ப விவரங்களைத் தாங்களே நிரப்பி சுய-தகவல் பதிவில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இது நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பு முயற்சி என்பதால், ஒவ்வொரு குடும்பமும் தங்கள் தகவல்களைச் சரியாக வழங்கி, தரவுகள் அடிப்படையிலான எதிர்காலத் திட்டமிடலுக்குப் பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

16வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டமான சுய-தகவல் பதிவு ஆகஸ்ட் 1 முதல் 14ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமான வீட்டுப் பட்டியல் பணிகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரையிலும் நடைபெறுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *