வேலைவாய்ப்பு

IRBn காவல் உதவி ஆய்வாளர் ஆட்சேர்ப்பு: உடல் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 13, 14ஆம் தேதிகளில்

புதுச்சேரி காவல் துறையின் இந்திய ரிசர்வ் படையில் (IRBn) காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு ஆணை கடந்த மே 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பங்கள் மே 18ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை பெறப்பட்டன. மொத்தம் 1,871 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

உரிய பரிசீலனைக்குப் பிறகு, தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் அரசு ஆட்சேர்ப்பு இணையதளமான recruitment.py.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.

உடல் தகுதித் தேர்வு (PST) மற்றும் உடல் திறன் தேர்வு (PET) ஆகியவை ஆகஸ்ட் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், அரசு வழங்கிய அடையாள அட்டையை அசல் நகலுடன் தவறாமல் கொண்டு வர வேண்டும்.

இந்த அறிவிப்பை IRBn தளபதி மற்றும் ஆட்சேர்ப்புக் குழுத் தலைவர் அனிதா ராய், ஐ.பி.எஸ். வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *