புதுச்சேரி CGL தேர்வு 2025: எழுத்துத் தேர்வு தேதிகள் அறிவிப்பு — ஆகஸ்ட் 21 முதல்
புதுச்சேரி அரசு PEA துறையின் அறிவிப்பின்படி, Combined Graduate Level (CGL) Exam – 2025க்கான எழுத்துத் தேர்வுகள் 2026 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளன.
21.08.2026: Statistical Inspector — காலை 9.00 முதல் 11.00 மணி வரை; Library & Information Assistant — நண்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை; Field Supervisor — பிற்பகல் 3.00 முதல் 5.00 மணி வரை.
22.08.2026: Agriculture Officer [Paper-II B], Agriculture Officer (Engineering) — காலை 10.00 முதல் 12.00 மணி வரை; Agriculture Officer (Hydrogeology) — நண்பகல் 12.00 மணி முதல்; Technical Officer — பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரை.
23.08.2026: அனைத்து எட்டு பணியிடங்களுக்கும் [Paper-I] — காலை 10.00 முதல் 12.00 மணி வரை; UDC [Paper-II] — பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரை.
அனுமதி அட்டை (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், விண்ணப்பதாரர்கள் அப்டேட் தகவல்களுக்கு recruitment.py.gov.in இணையதளத்தை தொடர்ந்து பார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனிக்க: 2022ல் வெளியான அறிவிப்புகளுக்கும் 2025 CGL தேர்வுக்கும் ஒரே விண்ணப்பதாரர் பல பணியிடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தாலோ, ஒரே பணியிடத்திற்கு 2022 மற்றும் 2025 இரண்டிலும் விண்ணப்பித்து இருந்தாலோ, தமது முன்னுரிமை வரிசையை (order of preference) எழுதி, ஆன்லைன் விண்ணப்பப் பிரதியுடன், Annexure-ல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி, “Member Secretary (PEA), Chief Secretariat, Puducherry” என்பவருக்கு நேரில் அல்லது dpar-exam@py.gov.in என்ற மின்னஞ்சலுக்கு 12.08.2026க்குள் அனுப்ப வேண்டும்.
2022ல் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு (Statistical Inspector, Library Assistant, Technical Officer, Agriculture Officer, Agriculture Officer – Engineering, Agriculture Officer – Hydrogeology) விண்ணப்பித்தவர்கள், தங்கள் கல்வித் தகுதிச் சான்றுகள் (கட்டாயம்), நேட்டிவிட்டி / குடியிருப்பு, சமூகச் சான்றுகள் ஆகியவற்றையும் இணைத்து 12.08.2026க்குள் Member Secretary (PEA) அவர்களிடம் நேரில் அல்லது மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். கேட்கப்பட்ட கல்வித் தகுதிச் சான்றுகளைச் சமர்ப்பிக்கத் தவறினால், அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2022 மற்றும் 2025 ஆகிய இரண்டு அறிவிப்புகளுக்கும் ஒரே பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள், எந்த விண்ணப்பத்தை ரத்து செய்ய வேண்டும், எதை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாக எழுதி அறிவிக்க வேண்டும். எதுவும் தெரிவிக்காதவர்களுக்கு, இயல்பாகவே 2025 விண்ணப்பம் மட்டும் செல்லுபடியாகக் கருதப்பட்டு, 2022 விண்ணப்பம் நகல் எனக் கருதி ரத்து செய்யப்படும்.

