தேசியம்

இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்படாத சோள ரகத்தை அறிமுகம் செய்தார் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

விஜயவாடா, ஆக. 24: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை ஆந்திர மாநில ஆளுநர் எஸ். அப்துல் நசீர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, முசுனூரில் உள்ள கோர்மெட் பாப்கார்னிகா தொழிற்சாலையில் நடைபெறும் பிரத்யேக நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார். இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்படாத (Non-GMO) உயர் ரக பாப்கார்ன் மக்காச்சோள விதைகளை அவர் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கிறார்.

நவீன விவசாயத் தொழில்நுட்பத்தில் இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தியாவின் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களைக் கௌரவிக்கும் விதமாகப் பாராட்டுச் சான்றிதழ்களையும், விருதுகளையும் துணை ஜனாதிபதி வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பதிலும், புதிய ரக விதைகளின் பயன்களை விவசாயிகளிடையே கொண்டு சேர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன