புதுச்சேரி

தமிழறிஞர் கு.சிவமணிக்கு இராதே அறக்கட்டளை சார்பில் புகழஞ்சலி

புதுச்சேரி, ஆக. 21: தமிழறிஞர் கு.சிவமணி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், தேவதாசு இராஜாபாதர் அவர்களின் இராதே அறக்கட்டளை சார்பில் சிறப்பு மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மேனாள் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா.இளங்கோ, பேராசிரியர்கள் பஞ்சாங்கம், இரவிக்குமார், பிரெஞ்சு பேராசிரியர் வெங்கடசுப்பராயநாயகர், கவிமாமணி வை. இராமதாசு காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று, கு.சிவமணி அவர்களின் இலக்கியப் பங்களிப்புகள் மற்றும் தமிழ்ப் பணி குறித்து உரையாற்றினர். வேணு.ஞானமூர்த்தி, தி.கோவிந்தராசு, சின்ன.சேகர், பரமேசுவரன், லியாகத், சீனு.தமிழ்மணி, கோ.சுகுமாரன், இரா.சுகுமாரன், சுகன்யா, பைரவி, கு.அ.தமிழ்மொழி, புதுவைத் தமிழ்நெஞ்சன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழறிஞர் கு.சிவமணி அவர்களின் குடும்பத்தினர், மகள் மற்றும் மகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த உருக்கமான புகழஞ்சலி நிகழ்வு, அவரது இலக்கியப் பயணத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைந்தது. புதுச்சேரியின் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இந்த நிகழ்வு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன