தமிழ்நாடு
கிராமப்புற இளைஞர்களுக்கு 50 சிறிய காளான் உற்பத்தி கூடங்கள்: ₹50 லட்சம் நிதி
சிறிய இடத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக காளான் வளர்ப்பு விளங்குகிறது. அசைவ உணவுக்கு இணையான புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட காளானின் தேவை சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நுகர்வோருக்கு தடையின்றி காளான் கிடைக்க கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களை கொண்டு 50 சிறிய காளான் உற்பத்தி கூடங்கள் நிறுவப்பட உள்ளன. 2026-27 ஆம் நிதியாண்டில் 50 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
In brief (English)
Tamil Nadu will establish 50 small-scale mushroom production units at a cost of ₹50 lakh to support self-employment among rural youth and women.