தமிழ்நாடு
மஞ்சள், இஞ்சி, பூண்டு சாகுபடியை விரிவாக்க ₹4 கோடி நிதி ஒதுக்கீடு
பழந்தமிழர் உணவிலும் மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகித்த மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு போன்ற கிழங்கு வகை சுவைதாளித பயிர்களுக்கு தற்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் பெரும் பங்காற்றி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டி தருகின்றன. இவற்றின் பயன்பாட்டையும் சாகுபடி பரப்பையும் அதிகரிக்கும் நோக்கில் 2026-27ஆம் ஆண்டில் 2,500 ஏக்கர் பரப்பில் சாகுபடி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
In brief (English)
Tamil Nadu has allocated ₹4 crore to expand the cultivation of turmeric, ginger, and garlic across 2,500 acres to meet rising commercial and medicinal demand.