புதுச்சேரி

புதுச்சேரி பொருளாதார வளர்ச்சி தேசிய சராசரியை விட அதிகம்: சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரை!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், மாநிலத்தின் நிகர வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விட கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

கூட்டத்தொடரின் தொடக்க உரையில் பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்தின் நிகர வருமானம் 11.4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த நிதியாண்டை விட 8.12 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தேசிய அளவிலான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விட அதிகம் என்பது பெருமைக்குரிய விஷயம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தெரிவித்த துணைநிலை ஆளுநர், பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திருபுவனை, திருக்கனூர், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுமார் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியோடு இணைந்து அனைத்து பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன