புதுச்சேரி

ஆரோவில்லில் ஸ்ரீ அரவிந்தர் பிறந்தநாள்: ‘பாரதத்தின் புரட்சியாளர்கள்’ ஓவியக் கண்காட்சி தொடக்கம்!

புதுச்சேரி, ஆக. 29: ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சர்வதேச நகரமான ஆரோவில் பாரத் நிவாஸில் உள்ள கலா கேந்திராவில் ‘பாரதத்தின் புரட்சியாளர்கள்’ (Revolutionaries of Bharat) என்ற தலைப்பிலான சிறப்பு ஓவியக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ஏஞ்சல் அகாடமி ஆஃப் ஆர்ட் நிறுவனத்தில் மேஸ்ட்ரோ மைக்கேல் ஜான் ஏஞ்சலிடம் 6 ஆண்டுகள் தீவிர பயிற்சி பெற்ற பிரபல ஓவியக் கலைஞர் பஜன் பிளாஹே இந்த ஓவியங்களை வரைந்துள்ளார். பாரம்பரிய கிளாசிக்கல் ரியலிசம் பாணியில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய புரட்சியாளர்களின் ஆளுமையையும், தேசபக்தி உணர்வையும் கண்முன்னே நிறுத்துகின்றன.

இந்தியாவின் வரலாற்று நினைவுகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள இக்கண்காட்சி, ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பாரத் நிவாஸ் வளாகத்திற்கு வருகை தந்து இக்கண்காட்சியைப் பார்வையிடலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன