தமிழ்நாடு

டாஸ்மாக் வழக்கு, குதிரை பேரம் வழக்கு: உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டாஸ்மாக் முறைக்கேடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், ஊத்தங்கரை தாவேக்க எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பாக திருவல்லிக்கேனி போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதையும் எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இரு மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளன.

In brief (English)

The Tamil Nadu government has appealed to the Supreme Court against Madras High Court stays in both the TASMAC irregularities case and a case alleging horse-trading involving a TVK MLA; both appeals come up before a bench led by Chief Justice Surya Kant tomorrow.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன