புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் முதற்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு நிறைவு!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்களுக்கான முதற்கட்ட தற்செயல் ஒதுக்கீடு (First Randomization) மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் முறைப்படி நடைபெற்றது.

தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒதுக்கீட்டுப் பணி மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ‘EVM Management System 2.0’ மென்பொருள் வாயிலாக கணினி குலுக்கல் முறையில் இயந்திரங்கள் தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டன.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் அனைத்தும் ரெட்டியார்பாளையத்தில் உள்ள துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அறையில் (Strong Room) பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு செய்யப்பட்ட இயந்திரங்களின் வரிசை எண் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன