புதுச்சேரி
உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. சரவணன் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
புதுச்சேரியில் உள்ள உள்துறை அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் சரவணன், அவருக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் எம்.எல்.ஏ. சரவணனுக்கு பொன்னாடை அணிவித்து தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இச்சந்திப்பின்போது உழவர்கரை தொகுதி சார்ந்த முக்கிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் சுமுகமாக கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.


