தேசியம்

முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண மகோற்சவம்: விழா ஏற்பாடுகள் தீவிரம்!

புதுச்சேரி, செப். 20:

புதுச்சேரி முதலியார்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ சீனிவாச பெருமாள் அவதார தின மகோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

புரட்டாசி மாதம் மற்றும் திருவோண நட்சத்திரம் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமானது என்பதால், அன்றைய தினம் கோயிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், விஷேச பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திருவிழாவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் கோயில் கௌரவ தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜான் குமார் எம்.எல்.ஏ., கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் மற்றும் கோயில் நிர்வாக ஆலோசனைக் குழுவினர் நேரில் பார்வையிட்டு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன