புதுச்சேரி

பிரதமர் மோடியின் பிறந்தநாள்: லாஸ்பேட்டையில் ‘சேவா சங்கல்ப அபியான்’ பிரம்மாண்ட ரங்கோலி திருவிழா!

புதுச்சேரி: பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் சேவையை போற்றும் வகையில், புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் ‘சேவா சங்கல்ப அபியான்’ (Seva Sankalp Abhiyan) பிரம்மாண்ட ரங்கோலி திருவிழா எழுச்சியுடன் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டும், குஜராத் மாநில முதலமைச்சராக 13 ஆண்டுகளும், நாட்டின் பிரதமராக 12 ஆண்டுகளும் என தொடர்ந்து 25 ஆண்டுகள் மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் ஆற்றி வரும் அவரது நிகரற்ற நிர்வாகப் பணியை கொண்டாடும் நோக்கிலும் இந்த ரங்கோலி திருவிழா ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன் மற்றும் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு ரங்கோலி கண்காட்சியைப் பார்வையிட்டு விழாவினை சிறப்பித்தனர். பிரதமரின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை சித்தரிக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகள் வண்ணமிகு கோலங்களை வரைந்து அசத்தியிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.பி. இராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன