புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா: கவிஞர் தமிழ்ஒளி குறித்து தமிழறிஞர்கள் சிறப்புரை!

புதுச்சேரி: புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா சங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை தாங்கினார். முன்னதாக சங்கத்தின் செயலர் பாவலர் சீனு. மோகன்தாசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கப் பொருளாளர் கலைமாமணி மு. பாலசுப்பிரமணியன் புரட்சிக் கவிஞர் தமிழ்ஒளி குறித்து உணர்ச்சிமிக்க கவிதை முழக்கம் நிகழ்த்தினார். தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழக தமிழியல் துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கவிஞர் தமிழ்ஒளியின் இலக்கியப் பங்களிப்புகள் மற்றும் சமுதாயப் பார்வை குறித்து விரிவான சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் தமிழ்ச் சங்க துணைத்தலைவர்கள் ப. திருநாவுக்கரசு, நா. போதண்டபானி மற்றும் துணைச்செயலர் மு. சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் செயந்திராசவேலு, அ. சிவேந்திரன், ஆனந்தராசா, தமிழறிஞர்கள் மற்றும் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் அருள்ராசு நன்றி கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன