உப்பனாறில் கட்டுவது பாலமா, தாஜ்மஹாலா? பணிகளை விரைந்து முடியுங்கள்: சட்டப்பேரவையில் MLA ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் காட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரி உப்பனாறு பாலம் கட்டும் பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதைக் கண்டித்து, சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தீவிர விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், “உப்பனாற்றில் இப்போது கட்டப்பட்டு வருவது பாலமா அல்லது தாஜ்மஹாலா? உலக அதிசயமான தாஜ்மஹால் கட்ட எடுத்துக்கொள்ளப்பட்ட பல ஆண்டுகால அவகாசத்திற்கு இணையாக உப்பனாறு பாலப் பணிகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றன. இந்த காலதாமதத்தால் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றனர்” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான உப்பனாறு பாலக் கட்டுமானப் பணிகளை இனியும் தாமதிக்காமல் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிட அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பேரவையில் வலியுறுத்தினார்.
