புதுச்சேரி

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆடி பெருவிழா முத்துப்பள்ளக்கு உற்சவத்துடன் நிறைவு

புதுச்சேரி வீராம்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடி பெருவிழா, இந்த ஆண்டு 6ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், முத்து விமானத்தில் தெப்பல் உற்சவமும் நடைபெற்றது.

விழா நிறைவாக 21ஆம் தேதி முத்துப்பள்ளக்கு உற்சவம் நடைபெற்றது. சுமார் 100 அடி அகலம் கொண்ட முத்துப்பள்ளக்கில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அரங்காவல் குழுவினரும் அப்பகுதி பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

In brief (English)

The Aadi festival at Veerampattinam Sengazhuneer Amman temple, Puducherry, concluded with the pearl-palanquin procession drawing thousands of devotees.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன