ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா: முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பட்டங்களை வழங்கினர்!

புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (RAGACOVAS) 27-வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி மற்றும் மாண்புமிகு உள்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, அவர்களின் எதிர்கால மருத்துவப் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவர் திரு. அன்பழகன் மற்றும் உசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கல்லூரி பேராசிரியர்கள், துறை அதிகாரிகள், மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)


