புதுச்சேரி

புதுச்சேரியில் சாலையோர வாகனங்கள் பறிமுதல் எச்சரிக்கை: 7 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் நடவடிக்கை

உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நோக்கில், புதுச்சேரி நகரத்தில் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வாகனங்களை அகற்றக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உழவர்கரை நகராட்சி அறிவித்துள்ளது.

உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவின்படி, சாலையோரம், பொது இடங்களில் சட்டவிரோதமாக நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்திவிட்டு, போக்குவரத்துக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கக் கூடாது. இதை உடனடியாகச் சரிசெய்ய, அடுத்த 7 நாட்களுக்குள் அந்த வாகனங்களை உரிமையாளர்கள் தாங்களே அகற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “இந்த 7 நாட்கள் முடிந்த பின், சாலையோரத்தில், பூங்கா அருகே, அரசு அலுவலகம், பள்ளி, மருத்துவமனை, சந்தை பகுதிகளில், பொதுப் பயன்பாட்டுத் தளங்களில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டும் கைவிடப்பட்டும் இருக்கும் இரு சக்கர, நான்கு சக்கர, வணிக வாகனங்களை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி சட்ட விதிகளின்படி நேரடியாகப் பறிமுதல் செய்யப்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன