புதுச்சேரி

புதுச்சேரி: உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகிகள்

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் டி.பி.ஆர். செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள், உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

புதுச்சேரி செய்திப் புகைப்படம்
புதுச்சேரி செய்திப் புகைப்படம்

உள்துறை அமைச்சராக ஆ. நமச்சிவாயம் மீண்டும் பொறுப்பேற்றதை முன்னிட்டு, அவரை நேரில் சந்தித்த திருக்கனூர் அருண் பேக்கரி சரவணன், கலியமூர்த்தி, அருண், நாஜிம், பாரதி, ரவிக்குமார், வினோத், மண்ணாடிப்பட்டு குமரன், இராமு உள்ளிட்ட பலர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் தலைமையின் கீழ் தங்களை பாஜகவில் முறைப்படி இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன