புதுச்சேரி

புதுச்சேரி போலீசாருக்கு ரூ.5.69 கோடி தேர்தல் உழைப்பூதியம்: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல்!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட காவல் அதிகாரிகள், இந்திய ரிசர்வ் பட்டாலியன் (IRBn) மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு சிறப்பு உழைப்பூதியம் வழங்க துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலின் போது சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறவும் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இரவு பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் கடின உழைப்பைப் பாராட்டும் வகையிலும், தேர்தல் பணிகளுக்கான ஊக்கத்தொகையாகவும் சிறப்பு உழைப்பூதியம் வழங்க தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள், ஐஆர்பிஎன் வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு சிறப்பு உழைப்பூதியம் வழங்குவதற்காக ரூ.5.69 கோடி நிதியை விடுவிக்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன