தேசியம்

சர்க்கரை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி: 10 லட்சம் டன் இறக்குமதிக்கு அனுமதி

புதுச்சேரி, அக். 19: இந்தியாவில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை தவிர்க்கவும் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 10 லட்சம் டன் சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்நாட்டு சந்தையில் சர்க்கரையின் விலையை சீராக வைத்திருக்கவும், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த வரி சலுகையுடன் கூடிய இறக்குமதி அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை விலையில் ஏற்படும் தேவையற்ற ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை சர்க்கரை ஆலைகள் மற்றும் சில்லறை வணிக சந்தைகளில் சாதகமான சூழலை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், சர்க்கரை கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், தட்டுப்பாடின்றி சர்க்கரை விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்த காலநீட்டிப்பு மற்றும் வரி விலக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன