புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடக்கி வைத்தார்!

புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் அமைந்துள்ள மணி எலக்ட்ரானிக்ஸ் (MANI ELECTRONICS) நிறுவனத்தில் புதிய ஆப்பிள் ஐபோன் (iPhone 18 Pro மற்றும் Pro Max) மொபைல் மாடல்களின் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய ஐபோன் மாடல்களை முறைப்படி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.டி. ஆறுமுகம் உடனிருந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வின் போது நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உடனிருந்தனர். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் புதுச்சேரி சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன