புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் தீவிர ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் மற்றும் களப்பணிகள் குறித்த சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வெ. வைத்திலிங்கம் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் நேரு மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்கள் குறித்து கூட்டத்தில் ஆழமாக ஆராயப்பட்டது.

மேலும், தேர்தல் களப்பணிகளை முடுக்கிவிடுவது, வாக்குச்சாவடி அளவிலான பிரச்சாரங்களை ஒருங்கிணைப்பது மற்றும் அடுத்தகட்ட தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன