புதுச்சேரி

“ஆள்மாறாட்டம் அல்ல… திட்டமிட்டே என் கணவர் கொலை!”: புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநரின் மனைவி பரபரப்பு புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர் ஆள்மாறாட்டத்தால் அல்லாமல் திட்டமிட்டே சதி செய்து கொல்லப்பட்டதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஆனந்தின் மனைவி சரோஜினி காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில், தனது கணவர் தவறான ஆள் அடையாளத்தால் கொல்லப்படவில்லை என்றும், அவரை நன்கு அறிந்தவர்களே திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலையில் நேரடித் தொடர்புடைய மேலும் 3 பேரைத் தனிப்படை அமைத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனைவி சரோஜினியின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொடூரக் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன